என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கோரவில்லை. அவ்வாறானதொரு கோரிக்கையை அவர் விடுக்க மாட்டார் என்றும் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (27) அலரிமாளிகையில் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவோம் அல்லது தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த சந்திப்பின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.