யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருதவதற்கான பேச்சுவார்த்தைகளில் இன்னும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இராணுவ நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், இராஜதந்திர பாதையில் உடன்பாடுகளை எட்ட முடியும் என்று தாங்கள் இன்னும் நம்புகிறோம்.
தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதனை நிராகரிக்கவில்லை என்றும் புட்டின் தெரிவித்துள்ளார்.