Home சினிமா விஜய்க்கு வில்லன் ஆகிறாரா கேஜிஎஃப் 2 அதீரா… வைரலாகப் பரவும் தகவல்!

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா கேஜிஎஃப் 2 அதீரா… வைரலாகப் பரவும் தகவல்!

69
0
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. த்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒருகட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி படத்தில் விஜய்யின் சகோதரர் வேடத்தில் நடிகர் ஷாம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்க்கு சகோதரர் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்துக்கு கே ஜி எஃப் 2 வில் கலக்கிய சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிரது. இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் மோகன் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here