Home உள்நாட்டு 6 மணிநேரம் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வீடு திரும்பிய நபர் உயிரிழப்பு

6 மணிநேரம் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வீடு திரும்பிய நபர் உயிரிழப்பு

94
0

ஹட்டனில் சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் வரிசையில் காத்திருந்து, மண்ணெண்ணெய் பெற்று வீடுதிரும்பிய வர்த்தகர் ஒருவர் இன்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தேவநாயகம் கிருஸ்ணசாமி (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த வர்த்தகர் ஹட்டன் நகரில் வாடகை கட்டடமொன்றில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (26) மாலை 5 மணியளவில் நிரப்பு நிலையத்துக்கு சென்ற அவர், வரிசையில் நின்று மண்ணெண்ணெய்யைப் பெற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பின்னர் தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக கூறிய குறித்த நபர் வாந்தி எடுத்த பிறகு, நித்திரைக்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை அவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித பாரதூரமான நோய்களும் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ள உயிரிழந்தவரின் மனைவி, மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தமையாலேயே தனது கணவர் மரணித்தார் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

எனினும், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here