Home உள்நாட்டு உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

46
0

உலக வங்கியிடமிருந்து நேற்று கிடைக்கப் பெற்ற 160 மில்லியன் டொலரை, எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்த முடியுமா? என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த 160 மில்லியன் டொலரை எரிபொருளை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியாது.

எனினும், இயலுமானால் அதனை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பின்பு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நிதியை எரிபொருள் கொள்வனவுக்கு பயன்படுத்த முடியாது என அறியப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here