Home வெளிநாட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மரியுபோல் நகர் போர்

முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மரியுபோல் நகர் போர்

45
0

மரியுபோல் நகரில் 3 மாதங்களாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரியுபோலின் அசோவ்ஸ்டால் உருக்கு ஆலையில் சிக்குண்டு இருந்த யுக்ரைன் போராளிகள் 2 மாதங்களுக்கு பின் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக மரியுபோல் நகரம் தற்போது கிரெம்லின் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரியுபோலின் கட்டுப்பாடானது ரஷ்யா மற்றும் கிரெம்லின் படைகளுக்கிடையிலான பாலமாகவும் அசோவ் கடலினை தனது கட்டுப்பாட்டிற்கு வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதனால் யுக்ரைனின் கடல் வர்த்தகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டினால் அந்த நகரம் ஸ்தம்பிதமாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here