Home வெளிநாட்டு அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

57
0

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது.

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் முதலாவது தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

அந்த நாட்டின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல்வாதிகளில் ஒருவரான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி அல்பானீஸை தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் எதிர்கொள்கிறார்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் என்பன இந்த முறை தேர்தலில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை தொழிற்கட்சி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த தேர்தலில் இந்த கருத்துக் கணிப்பு தவறானதாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here