ஆப்பிரிக்காவிற்கு வெளியே வழமையாக மங்கி பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் கண்டறியப்படாத நாடுகளில் அதனைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஆபத்து மிகக் குறைவானதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் வழமையாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் புதிதாக மங்கி பொக்ஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் அதனை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நபர் ஒருவரிடம் இருந்து மற்றுமொரு நபருக்கு பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.