எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில்விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் ஜீ.எல்.சந்திரசிறியிடம் தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.