ஜப்பான் கடல் பரப்பில் வடகொரிய 3 ஏவுகணைகளை ஏவியமைக்கு, அமெரிக்காவும், தென்கொரியாவும் கண்டம் வெளியிட்டுள்ளன. ஜப்பான் கடற்பரப்பை நோக்கி, 3 ஏவுகணைகளை வடகொரியா இன்று அதிகாலை ஏவியுள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தென் கொரியா மற்றும் ஜப்பான் முதலான நாடுகளுக்கான விஜயங்கள் நிறைவடைந்து ஒரு தினத்திற்குள் வடகொரியா ஏவுகணையை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த டோக்கியோ முயற்சிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வடகொரியாவினால் 3 ஏவுகணைகள் ஏவப்பட்டமை குறித்து, தென்கொரிய தேசிய பாதுகாப்புச் சபை கூடி ஆராய்துள்ளது.
இதன்போது வடகொரியாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அது கடுமையான ஆத்திரமூட்டும் செயற்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடகொரியா பேச்சுவார்த்தையை தேர்வு செய்யுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து, நீடித்த மற்றும் உறுதியான பேச்சவார்த்தைகளில் ஈடுபடுமாறும், வடகொரியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.