Home சினிமா AR முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்!

AR முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்!

82
0
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

 

அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளாராம். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் வரலாற்று திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் முன்பே வெளியாகின.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த வித்தியாசமான போஸ்டர் ரசிகர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here