Home விளையாட்டு IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் தெரிவு

IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் தெரிவு

61
0

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

இராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இதேநேரம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில், 2 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here