குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியாகும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடும்ப அடிப்படையிலான கட்சிகள், திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன.
தெலுங்கானாவில் குடும்ப அடிப்படையிலான கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றன.
ஏழை மக்களைப் பற்றி இந்தக் கட்சிகள் கவலைகொள்வதில்லை.
ஒரே குடும்பம் எவ்வாறு ஆட்சியில் இருக்க முடியுமோ, அந்தளவுக்கு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவற்றின் அரசியல் உள்ளது.
மக்களின் வளர்ச்சியில் அந்தக் கட்சிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை.
குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல.
அது ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியாகும்.
ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை இந்தியா பார்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.