Home உள்நாட்டு யுக்ரைன் – ரஷ்ய போரினால் உலகளவில் மிகப்பெரிய தாக்கம் – உலக வங்கி

யுக்ரைன் – ரஷ்ய போரினால் உலகளவில் மிகப்பெரிய தாக்கம் – உலக வங்கி

42
0

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புடன், ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி மற்றும் உரம் என்பனவற்றின் விலைகளில் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற வணிக நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தத் தாக்க நிலையை எவ்வாறு தவிர்க்கப்போகிறேம் என்பதை அவதானிப்பது கடிமானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் முடக்கமானது, இந்த தாக்க நிலை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கின்றது.

எரிசக்தி விலைகள் இரட்டிப்பாகும் என்ற யோசனையே, இந்தத் தாக்க நிலையை தூண்டுவதற்கு போதுமானதாகும் என்றும் உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here