Home விளையாட்டு லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியுடனான போட்டியில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி

லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியுடனான போட்டியில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி

70
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய வெளியேற்றும் போட்டியில் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியை, பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில் 208 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த வெற்றி மூலம் 2ம் தகுதிக்காண் போட்டிக்கு பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முன்னேறியுள்ளது.

குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயஸ் அணியை, பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here