Home உள்நாட்டு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் தாங்கிவூர்தி

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் தாங்கிவூர்தி

104
0

மாத்தளை – வில்கமுவ பிரதான வீதியில் எலோனாகந்த பகுதியில் எரிபொருள் கொள்கலன் தாங்கிவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கவனயீனத்தால் வீதியோரத்தில் உள்ள உயர் மின் அழுத்த கம்பத்துடன் குறித்த கொள்கலன் தாங்கிவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொள்கலன் தாங்கிவூர்தியில் இருந்த எரிபொருள் கசியத் தொடங்கியதையடுத்து அந்த இடத்தில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க காவல்துறையினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here