இங்கிலாந்தில் புதிதாக 71 பேர் மங்கி பொக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் சுமார் 200 க்கும் அதிகமானோர் மங்கி பொக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே காணப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தம்மை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மங்கி பொக்ஸ் நோய் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு பெரிய அம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது