Home உள்நாட்டு எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம்!

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம்!

60
0

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும்  100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வீசும் காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here