Home வெளிநாட்டு தாய்வான் வான் பரப்புக்குள் சீனா ஊடுருவல்

தாய்வான் வான் பரப்புக்குள் சீனா ஊடுருவல்

51
0
தமது வான் பரப்புக்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரிப்பதற்காக போர் விமானங்களை நிலைநிறுத்தியதாக தாய்வான் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவமானது, ஜனவரி மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய ஊடுருவலை குறிக்கிறது

தாய்வான் மீது படையெடுப்பதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவை எச்சரித்த சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தாய்வானின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களில் சீனா தமது விமான பயணங்களின் அதிர்வெண்ணை அதிகரித்துள்ளது.

எனினும் அவை பயிற்சி நடவடிக்கைகள் என சீனா கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here