பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட நம்பிக்கை பிரேரணைக்கு வாக்கெடுப்பில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவளித்துள்ளனர்
குறித்த வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 59 சதவீத வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்றின் மொத்த உறுப்பினர்களில் 211 பேர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
எதிராக 148 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இது மிகவும் சிறந்த விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவருக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகள் அவரது அதிகாரம் பலவீனமடைந்திருப்பதை காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சிலர் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.