இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை முதல் சில முக்கிய தரப்பினருக்கு எரிபொருள் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் வாகனங்களுக்காக இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தங்களுக்கு அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் குறைந்தளவிலான தனியார் பேருந்து சேவைகளே இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.