நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கொலின் டி கிரேன்தோம் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவரது வலது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவருக்கு உபாதை ஏற்பட்டது.
இந்தநிலையில் கொலின் டி கிரேன்தோம் குணமடைவதற்கு 10 முதல் 12 வாரங்கள் தேவை என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக சகல துறை ஆட்டக்காரர் மைக்கல் ப்ரேஸ்செல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.