Home உள்நாட்டு நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் – அமைச்சர் கஞ்சன

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் – அமைச்சர் கஞ்சன

31
0

நாளை முதல் வழமைப்போல் எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை 3,200 மெட்ரிக் டன் டீசலை சந்தைக்கு விநியோகித்து வந்துள்ளோம்.

வழமையாக 3,400 மெட்ரிக் டன் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

எனினும் தற்போது 2, 800 மெற்றிக் டன் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது.

நாளை முதல் 5,000 மெட்ரிக் டன் பெற்றோலும், 3, 500 மெட்ரிக் டன் டீசலும் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. மத்திய வங்கி அதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here