நாளைய தினம் லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ நிறையுடைய லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேல் மாகாணத்துக்கு லிட்ரோ எரிவாயு விநியோகிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.