Home உள்நாட்டு தொடருந்து கட்டணத் திருத்தத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள கோரிக்கை

தொடருந்து கட்டணத் திருத்தத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள கோரிக்கை

20
0

உடனடி கட்டணத் திருத்தத்திற்காக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எட்ட வேண்டும் என தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கோரியுள்ளார்.

அதிகரித்து செல்லும் எரிபொருள் கட்டணத்தால் ஏற்படும் செலவினத்தை தொடருந்து திணைக்களத்தால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் தொடருந்து சேவை அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தற்போது வரையில் பேருந்துக் கட்டணத்தில் 20 முதல் 27 சதவீதமான கட்டணமே தொடருந்து சேவையில் அறவிடப்படுகின்றது.

டீசல் விலை அதிகரிப்புடன் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது.

எனினும், வருமானத்தில் அந்தளவு அதிகரிப்பு ஏற்படவில்லை

மிகவும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்மையே இதற்கு காரணமாகும்

இந்த நிலையில் அரசாங்கம் எதிர்காலத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை மேற்கொண்டு தொடருந்து கட்டணத்தை அதிகரிக்க தொடருந்து திணைக்களத்திற்கு அனுமதி வழங்கும் என எதிர்ப்பாப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தேச 133 வழிகளுக்காக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை புதிதாக கேள்வி பத்திரங்களை கோரியுள்ளது.

வெற்றிடம் நிலவும் 415 பேருந்துகளுக்கான கேள்வி பத்திரங்களே கோரப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here