Home வெளிநாட்டு இந்தியா – பங்களாதேஷில் மின்னல் தாக்கி 42 பேர் பலி

இந்தியா – பங்களாதேஷில் மின்னல் தாக்கி 42 பேர் பலி

9
0

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு மழையுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவரும் என 17 பேர் மரணித்தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா வீதம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் கடந்த வார இறுதியில் மின்னல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர்.

அதே நேரத்தில் நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான வடகிழக்கு பகுதிகளில் மில்லியன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

2004ம் ஆண்டுக்கு பின்னர் பங்களாதேஷில் பதிவாகும் வெள்ளப்பெருக்கு இதுவாகும் என அந்த நாட்டு அனர்த்த முகாமை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here