ஹால்லே பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல் தர வீரரான டென்னில் மெத்வதேவ் தோல்வியடைந்துள்ளார்.
ஜெர்மனியின் வடக்கு பகுதியான ஹால்லேயில் நேற்று இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவ், போலந்தின் ஹபேர்ட் ஹர்காஸை எதிர்கொண்டிருந்தார்.
குறித்த ஆட்டத்தில் ஹர்காஸ் 6 க்கு 1, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.