Home சினிமா ஹிட் கொடுத்தும் பிரிந்த கூட்டணி.. யோகி பாபுவோடு இணைந்த ‘ஏ 1’ இயக்குனர் … பின்னணி...

ஹிட் கொடுத்தும் பிரிந்த கூட்டணி.. யோகி பாபுவோடு இணைந்த ‘ஏ 1’ இயக்குனர் … பின்னணி என்ன?

16
0
சந்தானத்துக்கு ஏ 1 திரைப்படம் மூலமாக வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் ஜான்சன் கே.

 

சந்தானம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான “ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன்.கே.  தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்த சந்தானத்துக்கு ஏ 1 திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதனால் இயக்குனர் ஜான்சனோடு மீண்டும் அவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்து பணியாற்றினார். அந்த படமும் சுமாராகப் போனது.

ஆனால் அந்த படத்தின் போது சந்தானத்துக்கும் இயக்குனருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் விழா ஒன்று நடக்கையில் மேடையிலேயே ஜான்சன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசினார். அப்போது அவரை மேடையில் சந்தானம் சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது ஜான்சன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து  “மெடிக்கல் மிராக்கல்” என்ற படத்தைத் தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக  அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் பூஜையோடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here