ஆப்பிரிக்கா, ரஷ்யாவின் பணயக்கைதி என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.
ஆப்பிரிக்க ஒன்றியத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பு யுக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்த செயற்பாடானது தானியங்கள் மற்றும் உரம் என்பவற்றுக்கான தட்டுப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது.
மில்லியன் கணக்கான மக்கள் உணவின்மையை எதிர்நோக்கும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் உலக ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு பேச்சுவார்த்தை அவசியமாகவுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆணையாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொலைகாணொளி ஊடாக இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு 55 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் நான்கு நாடுகளின் தலைவர்கள் மாத்திரமே இதில் பங்கேற்றிருந்தனர்.
ஏனைய நாடுகளின் தலைவர்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரைன் – ரஷ்ய போருக்கு பதிலளிப்பதில் ஆப்பிரிக்க நாடுகள் பிளவுபட்டுள்ளன.
அத்துடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு அவர்கள் பேச்சுவார்த்தைகளை விரும்புகின்றனர்.