இந்த வாரம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய விஜயத்தின் போது யுக்ரைனுக்கு பயணிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர் யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தற்போது அதற்கு சாத்தியமில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான எதிர்ப்பை வெளியிடும் வகையில் யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொள்ளாத மேற்கத்திய தலைவர்களில் ஒருவராக ஜோ பைடன் உள்ளார்.
கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரண்டு தடவைகள் யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.