Home சினிமா சுனைனா நடிப்பில் உருவாகும் ரெஜினா… இணையத்தில் கலக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சுனைனா நடிப்பில் உருவாகும் ரெஜினா… இணையத்தில் கலக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

8
0
சுனைனா நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான ‘ரெஜினா’ படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

தொழிலதிபர் சதீஷ் நாயர் என்பவர் தயாரிக்கும் திரைப்படம் ரெஜினா.  இந்த படத்திற்கு  அவரே இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டோமின் டி சில்வா என்பவர் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சுனைனா நடிக்க உள்ளார். சுனைனாவின் கணவராக நாக் அஸ்வின்  நடித்திருக்கும் இந்த படம் சராசரி குடும்பத்து பெண், தன் காணாமல் போன கணவனை தேடும் கதை என்பது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சுனைனா கையில் துப்பாக்கியோடு இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here