ருவண்டாவின் – கீகாலி நகரில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.
அந்த மாநாட்டில் 54 நாடுகள் பங்கேற்கவுள்ளன.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த மாநாடு நடைபெறவிருந்தது.
எனினும், சர்வதேச ரீதியாக தாக்கத்;தை செலுத்திய கொவிட்-19 பரவல் காரணமாக இரண்டு வருட காலமாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது.