இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் நாளை (23) இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரனும் அடங்குவார்.
அக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதே இவர்களது விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்கும் குறித்த தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளனர்.