2047 இல் இந்தியா உலகின் முதன்மை நாடாகும் – இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி

ளைஞர்களின் இலாப பங்கு (dividend) காரணமாக 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா, அனைத்து வகையிலும் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

‘தேசிய இளைஞர் மாநாடு 2023’இல் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைவு உணர்வு மேலோங்கிக் காணப்படுகிறது. அதனால் நாட்டில் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமைத்துவ பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் பொலிவுறு நகரங்கள் இயக்கம், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் சக்தி ஆகியவை இணைந்து இம்முறை இந்த தேசிய இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன என்றார்.

அத்துடன் அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் மிக முக்கியமானவர்களில் ஒன்றாக இருக்கும் ‘யுவசக்தி’ அமைப்பின் வலிமையை வலியுறுத்திய அதேவேளை, தாம் ‘நாஷா முக்த் பாரத்’தை நோக்கிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *