வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2100 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் இன்று (19)  அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலுக்கு முன்பாக 12 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.எமக்குத்தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையைத்தீர்த்து வைக்க வேண்டும்.நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர் . போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *