
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் மாவட்டத்தின் லால்தாங் பகுதியில் நேற்றிரவு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர்.
திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த பிரதேச காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தோர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.