3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ், காலி க்ளடியேட்டர்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்குபற்றுகின்றன.

இவ் வருடம் லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் சந்திப்பதுடன் மொத்தம் 20 லீக் போட்டிகள் நடைபெறும். இறுதிச் சுற்றில் 4 போட்டிகள் நடைபெறும்.

லீக் சுற்று போட்டிகள் டிசம்பர் 6ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 19ஆம் திகதிவரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

டிசம்பர் 21ஆம் திகதி முதலாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியும் நீக்கல் போட்டியும் 22ஆம் திகதி 2ஆவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *