ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

327

ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலையாளி காபூலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, பல எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றனர், ஆனால் கொல்லப்பட்ட முர்சல் நபிசாதா (Mursal Nabizada) நாட்டிலேயே தங்கியிருந்தார்.

கொலை நடந்த போது முர்சல் நபிஸாதாவுக்கு 32 வயது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *