பரீட்சையின் போதும் மின்சாரம் வழங்க முடியாத அரசாங்கம்

பரீட்சையின் போதும் மின்சாரம் வழங்க முடியாத அரசாங்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் இப்படிப்பட்ட தன்னிச்சையான மற்றும் இரக்கமற்ற முடிவை எடுத்ததில் ஆச்சரியப்படவில்லை என்பதற்கு காரணமாகும்.

இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான உயர்தரப் பரீட்சையின் போது கூட மின்சாரம் வழங்க முடியாத அரசாங்கம் எந்தளவு மக்கள் விரோத அரசாங்கமாக உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்

முன்னெப்போதையும் விட இவ்வருடம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு பிள்ளைகள் தோற்றுகின்றனர் என்பது இரகசியமல்ல. அவர்களின் எதிர்காலமும் போலவே நாட்டின் எதிர்காலமும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இப்பிள்ளைகள் இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். ஒருபுறம், நாடு பொருளாதார ரீதியில் மிகவும் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதோடு, மறுபுறம், இந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.

வாழ்வாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் வகையில், பரீட்சை நாட்களிலும் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானம் எடுக்கப்படுவதில் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *