
(வாஸ் கூஞ்ஞ) 21.08.2022
நாட்டில் ஏற்பட்டு வரும் பாலியல் வற்புறுத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றை தடுக்கும் முகமாக மலைநாட்டுப் பகுதியில் கொட்டகல நகரில் மக்கள் மத்தியில் விழப்புணர்வு பேரணியும் அத்துடன் வீதி நாடகமும் இடம்பெற்றது.
வேல்ட் விஷன் நிறுவனத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக நுவரெலியா அரசாங்க அதிபர் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகத்தர்கள் இந்த வீதி நாடகத்தில் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.