தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சமீபத்தில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் ரஞ்சிதமே என்ற பாடல் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதியபாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது.

விஜய், மானசி ஆகியோர் குரலில் அமைந்த ரஞ்சிதமே என்ற பாடல் 50 மில்லியன் வியூஸை தாண்டியுள்ளளது. 5 கோடி பார்வையாளர்களை குறைந்த காலத்தில் எட்டியுள்ள பாடல் என்ற சாதனை படைத்துள்ளது.

இதையொட்டி, ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு, டிரெண்டிங் செய்து வருகின்றனர். விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
வரும் பொங்கலுக்கு துணிவு படத்துடன் இப்படம் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *