மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர்.

பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 – 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது.

கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப்  போட்டி  வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது.

இலங்கை சார்பாக 4 ஆண்களும் 4 பெண்களும் பங்குபற்றுகின்றனர்.

ஆண்கள் அணியில் சமில குறே, நிஷான்த பெர்னாண்டோ, மொஹமத் ஷஹீல், எம்.ரி.எம். ஹில்மி ஆகியோரும் பேண்கள் அணியில் ரொஷிட்டா ஜோசப், சலனி லக்மாலி லியனகே, மதுஷிக்கா காஞ்சனமாலா, அரோஷா கௌஷாலி விக்ரமசிங்க ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

இப் போட்டியில் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 250 கெரம் போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *