
இந்தியாவின் உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனமொன்றினால் கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டைக்கோபுர கட்டிடம் 8 செக்கன்களில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பு தொகுதியில் ஒரு கோபுரத்தில் 32 தளங்களும் மற்றொரு கோபுரத்தில் 29 மாடிகளும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இந்திய உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 3,700 கிலோ வெடிமருந்துகளை கொண்டு 8 செக்கன்களில் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது
இந்த கட்டடங்களை இடிப்பதற்கு ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை வெடிக்க வைத்ததன் மூலம் ஏற்பட்ட 80 ஆயிரம் தொன் குப்பைகளை அகற்ற 3 ஆயிரம் லொரிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படுவதையடுத்து அந்த கட்டடங்களை சுற்றி உள்ள அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படும் போது, 984 அடி உயரம் வரையில் தூசு பரவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.