91 அத்தியாவசிய மருந்துபொருட்கள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலை காணப்பட்டதாக  அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது.

மயக்கமருந்து புற்றுநோய்  நோய் மருந்துகள் சுவாசப்பாதி;ப்புகள் நோய்களிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பொதுவான இருதயநோய்களிற்கான மருந்துகள் வலிநிவாரணிகள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை உருவாகும்வரை பொறுப்பான அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லைஎன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள மருந்துகளின் கையிருப்பு போதுமானதாகயில்லை இதன் காரணமாக ஒருமாதத்திற்கு போதுமான மருந்துகளை மருத்துவர்களால் வழங்க முடியவில்லை ஒருவாரத்திற்கான மருந்துகளையே வழங்குகின்றனர் இதனால் நோயாளிகள் மீண்டும் மருத்துவர்களை நாடவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *