ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது உக்ரைனில் தனது படைகள் இழைத்த யுத்த குற்றங்களிற்கு புட்டினே பொறுப்பு என சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புட்டின்  உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமாக ரஸ்யாவிற்கு நாடு கடத்தினார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. அவர் நேரடியாகவும் ஏனையவர்களுடன் இணைந்தும் இந்த குற்றங்களில் ஈடுபட்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது. சிறுவர்களை நாடு கடத்துவதை தடுப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறுவர்களிற்கான  ரஸ்ய ஆணையாளருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பித்துள்ளது.Read More →

(நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு, கல்வி மற்றும் சுகாதாரசேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், நாடளாவிய ரீதியில் சுமார் 7 மில்லியன் மக்கள் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2.9 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் 98.1 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் பெருமளவான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. நாளாந்தக் கூலித்தொழில்வாய்ப்புக்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் பெருந்தொகையானோர் தமது வருமானத்தை இழந்திருக்கின்ற போதிலும், அன்றாட வாழ்க்கைச்செலவு தொடர்ந்து அதிகரித்துச்செல்கின்றது. இது சமூகத்தின் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, பொதுமக்கள் தமது அன்றாட உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று கல்வி மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட சுகாதாரசேவை கிடைப்பனவில் நிலவும்Read More →

(எம்.மனோசித்ரா) இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் திங்கட்கிழமை (20) இடம்பெறவுள்ளது. இதன் போது எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் செவ்வாய்கிழமை (21)உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிப்பாளர் சபை அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் , இம்மாதத்திற்குள் 330 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறவுள்ளது. அத்தோடு இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் எட்டப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதற்கான முன்மொழிவினை நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இழுபறி நிலைமையிலேயே காணப்பட்டது. கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் இருதரப்பு கடன்Read More →

(எம்.மனோசித்ரா)   மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பித்த ஊழல் , மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடப்பட்டமையின் காரணமாகவே இன்று இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவது கடினம் என்ற போதிலும் , எம்மால் அதனை செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் மாநாடு வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நான் நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்தேன். கொள்ளையர்களுடன் அரசியலில் ஈடுபட முடியாது என்பதால் 2005ஆம் ஆண்டிலிருந்தே நான் விலகியிருந்தேன். 2015இல் எனது மீள் வருகையுடன் அனைவரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். எவரும் எதிர்பாராத பல மாற்றங்கள் இடம்பெற்றன. எனினும் அதன் பின்னர் 4 ஆண்டுகள் நான் அரசியலிலிருந்து விலகியிருந்தேன். தற்போது என்னை மீண்டும் களத்திற்கு அழைத்திருக்கின்றனர். ஆனால் இம்முறை மாற்றமொன்று இடம்பெறுமா என்பதுRead More →

(எம்.மனோசித்ரா) வடக்கு , கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் பல வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ள முப்படையினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பள பிரச்சினை , ஓய்வுதியக் கொடுப்பனவிலுள்ள சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சாகல ரத்நாயக்க தலைமையில் முப்படையினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது முப்படையினரின் தீர்க்கப்படாத 11 பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதோடு , அவற்றில் இரண்டு தவிர்ந்த ஏனைய அனைத்திற்கும் தீர்வினை வழங்குவதற்கு சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளால் சுமார் 7000 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தக் கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற முப்படையினருக்கு அவர்களுக்கான பகுதிகளில் 5 ஆண்டுகள் நிறைவடையாததால் 85 சதவீத ஓய்வூதிய இழப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்துRead More →

(இராஜதுரை ஹஷான்) ஆளுநர்கள் நிர்வாகத்தினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியால தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில்  வெள்ளிக்கிழமை (17) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து,மக்கள் போராட்டம் வெடித்து அதனூடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,எமக்கும் அரசியல் ரீதியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய பிரதான பேசு பொருளாக உள்ளது.ஏப்ரல்Read More →

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உடல் நலகுறைவு காரணாமாக களுபோவில வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக வவுனியா மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த  வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ரங்காவின் மெய்ப்பாதுகாவலராக செயற்ப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், ரங்கா உட்பட  குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவர் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் விபத்து தொடர்பான விசாரணைக்காக ஶ்ரீரங்கா ஆஜராகாமை ஆகிய விடயங்களைRead More →

(இராஜதுரை ஹஷான்) போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாது – நாமல் ராஜபக்ஷ பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம், மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைய போவதில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியால தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை (17) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஞாயிற்றுக்கிழமை (19) நிறைவு பெறுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டோம். உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.Read More →

(இராஜதுரை ஹஷான்) உயர்வடைந்துள்ள வாழ்க்கை செலவுகளை தனியார் சேவை துறையினரால் சமாளிக்க முடியுமாயின்,அரச சேவையாளர்களால் ஏன் சமாளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரச தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வாழ்க்கைச் செலவு அதிகம்,வரி அதிகம் என அரச சேவையாளர்கள் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் அரச சேவையை காட்டிலும், தனியார் துறையில் அதிகளவானோர் தொழில் புரிகிறார்கள்.குறைவான சம்பளம் பெறுகிறார்கள்,நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பங்களிப்பு வகிக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் தனியார் சேவைத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தனியார் சேவை துறையினருக்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து இருப்பதில்லை. ஆகவே வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் ஏன் அரச சேவையாளர்களினால் முடியாது. பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரில் பெரும்பாலானோர் வரி விதிப்புக்குள்Read More →

(இராஜதுரை ஹஷான்) இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவை ஆகியவற்றை தவறாக வழிநடத்தி ஆணைக்குழுவின் சட்டத்தை மீறியுள்ளார் என இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் 5(2) உறுப்புரையின் பிரகாரம் ‘ஒரு நபர் அல்லது அவருடன் தொடர்புடைய நபர் பொதுப்பயன்பாட்டு துறைசார்ந்த ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியியல் சார்ந்த அல்லது வேறு வழிகளில் தொடர்புடையவராக காணபடுவாராயின் அவர் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க கூடாது:’என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் சட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின்சாரத்துறை கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய துஷான் ஜயசூரிய இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்திய கடதாசி ஊடாக அவர் உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுள்ளார். ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான நபர்களைRead More →